Idhayam Matrimony

ஓரிரு ஆண்டுகளில் சூரியவன்ஷி இந்திய அணியில் விளையாடுவார் : சிறுவயது பயிற்சியாளர் நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      விளையாட்டு
Suryavanshi 2025-04-29

Source: provided

மும்பை : இளம் வீரர் சூரியவன்ஷி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று அவருடைய சிறுவயது பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒரே இரவில் பிரபலம்...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்  நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் இடையிலான போட்டியில் குஜராத்தின் பந்துவீச்சைச் சிதறடித்த 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி ஒரே இரவில் மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்தப் போட்டியில் 35 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசிய அவர் 38 பந்துகளில் 101 ரன்களில் எடுத்து விக்கெட்டை கொடுத்து வெளியேறினார். அதிரடி காட்டிய அவருக்கு முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆட்டநாயகன் விருதை வென்ற சூரியவன்ஷிக்கு பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் அறிவித்துள்ளார்.

முன் மாதிரியாக...

 இந்த நிலையில் இதுகுறித்து சூரியவன்ஷியின் சிறுவயது பயிற்சியாளர் மணீஷ் ஓஜா கூறும்போது, “ஒரு பயிற்சியாளராக எனக்கு மிகவும் பெருமை மிக்க தருணம். பிகார் போன்ற மாநிலங்களில் அதிகம் பிரபலம் இல்லாத கிரிக்கெட் விளையாட்டில் ஒரு வீரர் சிறந்து விளங்குவது அனைவருக்கும் நம்பிக்கையின் உணர்வைத் தரும். இந்தச் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவர் பலருக்கும் முன்மாதிரியாக உள்ளார்.

ஓரிரு ஆண்டுகளில்...

இதேபோன்று அவர் சிறப்பாக விளையாடினால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அவர் இந்திய டி20 அணியில் இடம்பிடிப்பார். நாங்கள் அவருக்கு தொடர்ந்து பயிற்சியளித்து வருகிறோம். இருந்தாலும் அவரிடம் இயற்கையான திறமைகள் நிறைய இருக்கின்றன. அவர் மூத்த வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளார். அவர்கள் என்ன கூறினாலும் அதைக் கேட்டுக் கொள்கிறார். தொடக்கம் முதலே அதிரடியாகவும் விளையாடுகிறார். எப்படி விளையாட வேண்டும்; ஆட்டத்தை எப்படி மாற்ற வேண்டும் என்ற அணுகுமுறை சூரியவன்ஷியிடம் இருக்கிறது என்றார் பயிற்சியாளர் மணீஷ் ஓஜா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து