Idhayam Matrimony

2026-ல் ஒரே வெர்ஷன் தான்; அது அ.தி.மு.க. வெர்ஷன்: எடப்பாடி பழனிசாமி பதிவு

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      தமிழகம்
EPS 2023 03 27

சென்னை, 2026-ல் ஒரே வெர்ஷன் தான் -அது அ.தி.மு.க. வெர்ஷன் தான் என எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி... சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி... பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி... போதைப் பொருள் கடத்தலுக்கு  தி.மு.க. அயலக அணியே சாட்சி... போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம்  தி.மு.க. இளைஞரணி கூட்டமே சாட்சி... ஸ்டாலின் மாடல் சமூக (அ)நீதிக்கு வேங்கைவயலே சாட்சி...

ஏற்கனவே ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே தோல்வி. இதில் இன்று வெர்ஷன் 2.0 லோடிங் ஆம்.. அ.தி.மு.க. ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமீனில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதல்-அமைச்சரே சாட்சி!

2026-ல் ஒரே வெர்ஷன்தான் -அது அ.தி.மு.க. வெர்ஷன்தான். மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு #ByeByeStalin… என்று சொல்லும்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து