முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்ரிட் ஓபன்: ஜோகோவிச் தோல்வி

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      விளையாட்டு
Jokovic 2023-09-06

Source: provided

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார். அடுத்த மாதம் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில் மாட்ரிட் ஓபன் போட்டியில் நோவக் ஜோகோவிச் பங்கேற்றார். முதல் சுற்றில் இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டியும், ஜோகோவிச்சும் மோதினர்.

இதில் அர்னால்டி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலும் ஜோகோவிச் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

_________________________________________________________________________________________________

புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. முதல் இடம்

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லியில் நடந்தது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.  

இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள ஆர்.சி.பி. அணி தொடர்ந்து 6 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது. 2வது இடத்தை குஜராத்தும், 3வது இடத்தை மும்பையும், 4வது இடத்தை டெல்லியும், பஞ்சாப் கிங்ஸ் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

_________________________________________________________________________________________________

ராகுலை நக்கல் அடித்த கோலி

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கியபெங்களூரு அணி 18.3 ஓவரில் 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

இதனையடுத்து இது என்னோட ஹோம் கிரவுண்ட் என பெங்களூரு மைதானத்தில் கே.எல்.ராகுல் செய்த சைகையை டெல்லி மைதானத்தில் ஜாலியாக ரீ-க்ரியேட் செய்து விராட் கோலி கிண்டலடித்தார். முன்னதாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. அப்போட்டியில் 93 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் வட்டமிட்டு அடித்து ஆக்ரோஷமாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

_________________________________________________________________________________________________

சாதனை படைத்த புவனேஸ்வர் 

18-வது ஐ.பி.எல். தொடரில், டெல்லியில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில்  முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது.  அடுத்து 163 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஐ.பி.எல். தொடரில் புவனேஸ்வர் குமார் இதுவரை 193 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார்.

_________________________________________________________________________________________________

மலிங்கா சாதனையை முறியடித்த பும்ரா

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில்  முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19 ஆவது ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மலிங்காவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். மும்பை அணிக்காக பும்ரா இதுவரை 174 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக மும்பை அணிக்காக மலிங்கா 170 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. 

_________________________________________________________________________________________________

சி.எஸ்.கே. குறித்து ரெய்னா

 நடப்பு ஐ.பி.எல். தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் கூறியதாவது: ஐ.பி.எல். ஏலத்திலேயே சி.எஸ்.கே. அணி தோற்றுவிட்டது.  கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களை ஏன் சி.எஸ்.கே. வாங்கவில்லை?

இந்த ஐ.பி.எல். ஏலத்தைப் பொறுத்தவரை தோனியின் தலையீடு ஏதும் இல்லை. முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவு. தோனியைப் பொறுத்தவரை 43 வயதிலும் அணிக்கு தேவையானதை களத்தில் இருந்து செய்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்தது இல்லை. இளம் பிளேயர்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். என்னைப் பொறுத்தவரை தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாடுவார். சி.எஸ்.கே. நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து