Idhayam Matrimony

மதுரை: தனியார் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி தாளாளர் உள்பட 5 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      தமிழகம்
Boot 2024 07 22

மதுரை, மதுரை கே.கே.. நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில்  தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவத்தில் பள்ளி தாளாளர் உள்பட ஐந்து பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை கே.கே. நகர் பகுதியில் இயங்கி வரும் மழலையர் பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியை திவ்யா என்பவர் நடத்தி வருகிறார், கோடைகால பயிற்சி முகாமில் நான்கு ஆசிரியர்கள், தாளாளர் ஆகியோர் மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பள்ளியில் பயிலக்கூடிய மற்ற பள்ளி மழலையர்கள் இந்த கோடைகால சிறப்பு வகுப்பில் பயின்று வருகிறார்கள்.

மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதன் என்பவரது நான்கு வயது மகள் ஆருத்ரா, மழலையர் பள்ளியில் தனது நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளி வளாகத்தில் சுமார் 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக உள்ளே விழுந்துள்ளார்.

இதைக் கண்ட மற்ற குழந்தைகள் உடனடியாக மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக அங்கு ஓடி வந்த ஆசிரியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அரை மணி நேரம் போராடி தொட்டிக்குள் கிடந்த சிறுமியை மீட்டு பள்ளி அருகே 100 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தை அதிகளவு தண்ணீர் குடித்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இச்சம்பம் தொடர்பாக அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தாளாளர் திவ்யா மற்றும் மழலையர் பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர் உள்பட ஐந்து பேரை அண்ணாநகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து