எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'கட்டப்பாவ காணோம்' கதாநாயகி ஐஸ்வர்யா
'கட்டப்பாவ காணோம்' கதாநாயகி ஐஸ்வர்யா
எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும், அதை அழகாய் உள்வாங்கி கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதத்தில் நடிக்கும் ஒரு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். குப்பத்தில் வாழும் சாதாரண பெண்மணி கதாப்பாத்திரத்திரமாக இருந்தாலும் சரி, மாளிகையில் வாழும் இளவரசி கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி, தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், இயல்பான பாவனைகளாலும் ரசிகர் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்ற ஐஸ்வர்யா, தற்போது சிபிராஜுடன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் 'கட்டப்பாவ காணோம்'. 'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து, இயக்குனர் அறிவழகனின் இணை இயக்குனரான மணி செய்யோன் இயக்கும் இந்த 'கட்டப்பாவா காணோம்' திரைப்படத்தில் சாந்தினி, காளி வெங்கட், யோகி பாபு, மைம் கோபி, லிவிங்க்ஸ்டன், திருமுருகன் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
" இதுவரை நான் நடித்துள்ள சவாலான கதாப்பாத்திரங்கள் யாவும், எனக்கு நற்பெயரை சம்பாதித்து தந்திருக்கிறது. ஆனால் என்னுடைய நிஜ வாழ்க்கையை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் வண்ணமாக அமைந்த கதாப்பாத்திரங்கள் கொஞ்சம் குறைவு தான். அந்த வகையில் இந்த 'கட்டப்பாவ காணோம்' திரைப்படதில் என் கதாப்பாத்திரமானது, என்னுடைய வயதையும், என் அன்றாட வாழ்க்கையையும் ஒட்டியே அமைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. இந்த படத்தில் சிபிராஜிற்கு ஜோடியாக நடிக்கும் என்னுடைய கதாப்பாத்திரத்தின் பெயர் 'மீனு'. இன்றய காலக்கட்டத்தில் எப்படி சராசரி மாடர்ன் பெண்கள் இருக்கிறார்களோ, அப்படியே என்னுடைய மீனு கதாப்பாத்திரமும் இருக்கும். கிராமத்து பெண் வேடம், சிட்டி பெண் வேடம் என எந்த வித்தியாசமும் எனக்கு கிடையாது. இரண்டுமே சரிசமமாய் என் மனதோடு எப்போதும் ஒட்டி இருக்கும் கதாப்பாத்திரங்கள் தான்..." என்று கூறுகிறார் அழகும், அறிவும் ஒருங்கே இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.
சந்தோஷ் தயாநிதி (இனிமே இப்படி தான்) இசையிலும், ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவிலும் உருவாகும் இந்த கட்டப்பாவ காணோம் திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராக (இறுதி சுற்று) சதீஷ் சூர்யாவும், கலை இயக்குனராக லக்ஷ்மி தேவும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. பல சுவாரசியங்களை உள்ளடக்கி இருக்கும் கட்டப்பாவ காணோம் திரைப்படமானது விரைவில் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நல்ல காலமாக நீந்தி செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2024.
29 Nov 2024 -
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
29 Nov 2024மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் புயல்
29 Nov 2024சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மோசமான வெள்ளம்: மலேசியாவில் 3 பேர் பலி
29 Nov 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.