எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'கட்டப்பாவ காணோம்' கதாநாயகி ஐஸ்வர்யா
'கட்டப்பாவ காணோம்' கதாநாயகி ஐஸ்வர்யா
எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும், அதை அழகாய் உள்வாங்கி கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதத்தில் நடிக்கும் ஒரு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். குப்பத்தில் வாழும் சாதாரண பெண்மணி கதாப்பாத்திரத்திரமாக இருந்தாலும் சரி, மாளிகையில் வாழும் இளவரசி கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி, தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், இயல்பான பாவனைகளாலும் ரசிகர் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்ற ஐஸ்வர்யா, தற்போது சிபிராஜுடன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் 'கட்டப்பாவ காணோம்'. 'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து, இயக்குனர் அறிவழகனின் இணை இயக்குனரான மணி செய்யோன் இயக்கும் இந்த 'கட்டப்பாவா காணோம்' திரைப்படத்தில் சாந்தினி, காளி வெங்கட், யோகி பாபு, மைம் கோபி, லிவிங்க்ஸ்டன், திருமுருகன் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
" இதுவரை நான் நடித்துள்ள சவாலான கதாப்பாத்திரங்கள் யாவும், எனக்கு நற்பெயரை சம்பாதித்து தந்திருக்கிறது. ஆனால் என்னுடைய நிஜ வாழ்க்கையை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் வண்ணமாக அமைந்த கதாப்பாத்திரங்கள் கொஞ்சம் குறைவு தான். அந்த வகையில் இந்த 'கட்டப்பாவ காணோம்' திரைப்படதில் என் கதாப்பாத்திரமானது, என்னுடைய வயதையும், என் அன்றாட வாழ்க்கையையும் ஒட்டியே அமைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. இந்த படத்தில் சிபிராஜிற்கு ஜோடியாக நடிக்கும் என்னுடைய கதாப்பாத்திரத்தின் பெயர் 'மீனு'. இன்றய காலக்கட்டத்தில் எப்படி சராசரி மாடர்ன் பெண்கள் இருக்கிறார்களோ, அப்படியே என்னுடைய மீனு கதாப்பாத்திரமும் இருக்கும். கிராமத்து பெண் வேடம், சிட்டி பெண் வேடம் என எந்த வித்தியாசமும் எனக்கு கிடையாது. இரண்டுமே சரிசமமாய் என் மனதோடு எப்போதும் ஒட்டி இருக்கும் கதாப்பாத்திரங்கள் தான்..." என்று கூறுகிறார் அழகும், அறிவும் ஒருங்கே இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.
சந்தோஷ் தயாநிதி (இனிமே இப்படி தான்) இசையிலும், ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவிலும் உருவாகும் இந்த கட்டப்பாவ காணோம் திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராக (இறுதி சுற்று) சதீஷ் சூர்யாவும், கலை இயக்குனராக லக்ஷ்மி தேவும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. பல சுவாரசியங்களை உள்ளடக்கி இருக்கும் கட்டப்பாவ காணோம் திரைப்படமானது விரைவில் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நல்ல காலமாக நீந்தி செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இ
-
தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
25 Nov 2024சென்னை, தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள
-
ஐ.பி.எல். மெகா ஏலம் 2-வது நாள்: சாம் கர்ரண் ரூ.2.40 கோடி ஏலம்; குருனால் ரூ.5.75 கோடிக்கு ஏலம்
25 Nov 2024ஜெட்டா : ஐ.பி.எல். தொடரின் 2-ம் நாள் மெகா ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்றது. இதில் சாம் கர்ரணை ரூ.2.40 கோடி ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
-
கடலூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு: பொதுமக்களின் நண்பர்களாக காவலர்கள் செயல்பட வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
25 Nov 2024கடலூர், கடலூர் மாவட்டம் முதுநகர் காவல் நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
-
ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்பு மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியின் பெயர் மாற்றம் : அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை
25 Nov 2024நாமக்கல் : ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் 'அரிசன் காலனி’ என்ற பெயரை அமைச்சர் அன்பில் மகேஷ் அழித்தார்.
-
அதானி நன்கொடை: தெலுங்கானா முதல்வர் நிராகரிப்பு
25 Nov 2024ஐதராபாத், அதானி வழங்க முன்வந்த நன்கொடை பணத்தை வேண்டாமென தெலங்கானா முதல்வர் நிராகரித்துள்ளார்.
-
பெர்த் முதல் டெஸ்ட்போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
25 Nov 2024பெர்த் : பெர்த் முதல் டெஸ்ட்போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்ற
-
ஜார்க்கண்டில் இருவர் சுட்டுக்கொலை
25 Nov 2024ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
-
அதி கனமழை எச்சரிக்கை: நாகை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
25 Nov 2024நாகை, நாகை மாவட்டத்திற்கு இன்று (நவ. 26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
-
ரோகித் சர்மா இணைந்தார்
25 Nov 2024இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆடி வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2024.
26 Nov 2024 -
கடலூரில் அண்ணா ஸ்டேடியத்தில் 15.08 கோடி ரூபாயில் செயற்கை இழை தடகள ஓடுதளப் பாதை: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
25 Nov 2024கடலூர், கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ.15.08 கோடி மதிப்பில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை அமைக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் த
-
அவரின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்: ஜெய்ஸ்வாலுக்கு இந்திய கேப்டன் பும்ரா பாராட்டு
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் பும்ரா தெரிவிக்கையில் ஜெய்ஸ்வாலின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் என்று அவருக்கு பாராட்டு தெரிவித்தார