முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் அதிகரித்துவரும் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 15 மே 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 15 -  கோடை விடுமுறையை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு  ஆயிரக்கணக்கான மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். நேற்று முன்தினம் (13.05.12) மட்டும் 30,000 மக்கள் பூங்கா துவங்கப்பட்டதிலிருந்து இது நாள் வரை இவ்வளவு எண்ணிக்கையில் கோடை காலங்களில் ஒரே நாளில் வருவது இதுவே முதல் முறையாகும். இவ்வளவு மக்கள் பூங்காவை பார்க்க வந்ததற்கு முக்கிய காரணம் இங்கு பார்வையாளர்களுக்கும், விலங்குகள் மேம்பாட்டிற்கும் செய்துள்ள சிறப்பு பணிகள் ஆகும். குறிப்பாக யானைக்குளியல், கரடிகள் தேன் அறுந்துதல், தீக்கோழி குஞ்சு பொரித்துள்ளது. மற்றும் பிற பாலூட்டிகள் குட்டி  ஈன்றுள்ளதையும், புது வரவான காட்டுக் கழுதை மற்றும் கோடைக்கால சிறப்புப் பணிகளைப் பார்த்து பார்வையாளர்கள் கண்டு ரசிக்கின்றனர்கள். மேலும் பூங்கா விலங்கு இருப்பிடங்கள் வண்ணம் தீட்டப்பட்டு, பார்வையாளர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர், சிற்றுண்டி, கழிவறை மற்றும் பூங்காவை சுற்றிப்பார்க்க வாகன வசதிகள்  என பல்வேறு வசதிளை பூங்கா நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றது. பூங்கா நிர்வாகம் பார்வையாளர்களின் உடைமைகளை பாதுகாக்கும் பொருட்டும் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாதவாறு வனச்சீருடை பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். எனவே, கோடைக் காலத்தை முன்னிட்டு நாளொன்றுக்கு சுமார் 20,000 முதல் 30,000 பார்வையாளர்கள் வந்து பூங்காவை கண்டு ரசித்து செல்கின்றனர் என அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவிக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்