முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபானுடன் அமெரிக்கா கூட்டு: அதிபர் கர்சாய் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 11 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

காபூல், மார்ச்.12 - ஆப்கன்கனை அச்சுறுத்தவும், அமெரிக்க படைகள் வெளியேறுவதை தடுக்கவும், அமெரிக்காவும், தாலிபன் அமைப்பும் இணைந்து செயல்படுகின்றன, என  ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் குற்றசாட்டியுள்ளார். அமெரிக்க ராணுவ அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சக் ஹகல் முதல் முறையாக ஆப்கன் வந்துள்ளார். அவரது வருகையின் போது கர்சாய் இப்படி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், காபூல் மற்றும் கோஸ்ட் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டு வெடிப்பின் மூலம் அமரிக்க படைகள் ஆப்கனில் இருந்தால் மட்டுமே ஆப்கனில் அமைதி நிலவும் என்ற பிம்பத்தை அமரிக்கா உருவாக்க பார்க்கிறது.

கடந்த 2011 ஆண்டு முதல் ஆப்கனில் தங்கியுள்ள அமரிக்க படைகள் வரும் 2014-ம் ஆண்டு ஆடிப்கனை விட்டு வெளியேற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க படைகள் இல்லாவிடில் ஆப்கன் மக்களை காப்பாற்ற இயலாது என்ற எண்ணத்தை தாலிபன்களின் மூலமாக ஏற்படுத்த அமெரிக்கா முயச்சிக்கிறதுா என்றார் கர்சாய்.

ஆனால் கர்சாயின் இந்த குற்றச்சாட்டை ஹகல் மறுத்துள்ளார். தலிபான்களுடன் அமெரிக்கா ஒருபோதும் கூட்டு சேராது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்சாயின் இந்த பேட்டிக்கு பின்னர், இருவரும் கூட்டாக நடத்தவிருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ரத்தாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்