முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிர மாநில 5 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, மார்ச் 22 - மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை வளாகத்தில் காவல் துறை அதிகாரியை தாக்கிய 5 எம்.எல்.ஏ.க்கள்  இந்த ஆண்டு முழுவதும்  சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக, மகாராஷ்டிர சட்டப்பேரவையில்  பேரவை விவகாரங்கள்  துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாட்டீல் புதன்கிழமை கொண்டு வந்த  தீர்மானம் குரல் வாக்கு  மூலம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து  பேரவையில்  பாட்டீல்  கூறுகையில் 5 எம்.எல்.ஏ.க்களின் செயல் பேரவையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் உள்ளது.  எனவே, இந்த ஆண்டு  டிசம்பர் 31 ம் தேதி  வரை சட்டப்பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள  அவர்களுக்கு  தடை விதிக்கப்படுகிறது.  அதுமட்டுமல்லாமல் மும்பை மற்றும்  நாகபுரியில் உள்ள பேரவை  வளாகத்துக்குள்  நுழைவதற்கும்  தடை விதிக்கப்படுகிறதுா என்றார். 

ராம் கதம் (எம்.என்.எஸ்.) ஜெயகுமார் ராவல் (பா.ஜ.க.) ஷிதிஜ்தாகுர் (பகுஜன் விகாஸ் அகதி), ராஜன் சல்வி(சிவசேனை ) மற்றும் பிரதீப் ஜெய்ஸ்வால் (சுயேச்சை) ஆகியோர்  சஸ்பெண்ட் செயப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள்  ஆவர். மும்பை சட்டப்பேரவையின் பார்வையாளர் மாடத்திற்கு வெளியே  பணியில் இருந்த வொர்லி  காவல் நிலையத்தின்  துணை ஆய்வாளர் சச்சின்  சூர்யவம்சி மீது எம்.எல்.ஏ.க்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பாந்த்ரா - வொர்லி கடற்கரை சந்திப்பு அருகே திங்கள்கிழமை  பணியில் இருந்த சூர்யவம்சி, அவ்வழியாக வந்த எம்.எல்.ஏ. ஷிதிஜ் தாகுர்  காரை நிறுத்தி உள்ளார்.  அதிவேகமாக  வந்ததாகக் கூறி அவருக்கு அபராதம் விதித்துள்ளார். இதன் காரணமாகவே சூர்யவம்சி மீது தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்