முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக தோல்வி: அதிர்ச்சி ஏதும் இல்லை: அத்வானி

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 13  - கர்நாடகத்தில் தோல்வி அடைந்தது குறித்து எனக்கு அதிர்ச்சியே ஏற்படவில்லை. ஒரு வேளை ஜெயித்திருந்தால் அதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி. 

இதுகுறித்து தனது பிளாக்கில் அவர் எழுதியிருப்பதாவது, கர்நாடகத்தில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் ஆச்சரியப்படவில்லை, அதிர்ச்சி அடையவில்லை. ஒரு வேளை ஜெயித்திருந்தால்தான் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்திருப்பேன். கர்நாடக தேர்தல் முடிவுகள் பா.ஜ.க வுக்கு நல்ல பாடம். ஒரு வகையில் இது காங்கிரசுக்கும் கூட பாடம்தான். மக்களை சாதாரணமாக கருதக் கூடாது என்பது பா.ஜ.க மற்றும் காங்கிரசுக்கு இந்த தேர்தல் முடிவு தந்துள்ள பொதுவான பாடமாகும். மக்கள் மிகவும் முக்கியமானவர்கள், மதிப்புமிக்கவர்கள் என்று அதில் கூறியுள்ளார் அத்வானி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்