முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மே. 20 - தமிழ் தேசிய கூட்டணி கட்சியினரால் இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட, பல லட்ச மக்கள் வீடுகளை, உறவுகளை இழந்து வாட காரணமான விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்குமான இறுதிப் போர் நான்கு வருடங்களுக்கு முன்பு மே மாதம் தான் நடை பெற்றது. இப்போரில் கொல்லப்பட்ட சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்காக, இலங்கையின் முக்கிய எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டணி கட்சியினர், வவுனியாவில் ஒன்று கூடி நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தினர்.

அதேசமயம், போர் வெற்றியின் 4 ஆண்டு தினத்தை இலங்கை அரசும் கொண்டாடியது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்த போரை நினைவு தினமாக யாரும் அனுசரிக்கக்கூடாது. அப்படி அனுசரித்தால் அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கொழும்பு தினசரி பத்திரிக்கையில் எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்