முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 தரவரிசை: இந்திய அணி தொடர்ந்து 3-வது இடம்

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், ஜூலை. 26 -  ஐ.சி.சி.யின் டி - 20 போட்டிக்கான தர வரிசைப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து 3-வது இடத்தை தக்க வைத்து உள்ளது. இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி. சி.) நேற்று வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் மேற்கண்ட விபரம் தெரிய வந்துள்ளது. 

டி - 20 சாம்பியனான மே.இ.தீவு மற்று ம் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே யான 2 போட்டிகள் கொண்டி  - 20 தொடர் செயின்ட் வின்சென்ட் தீவில் உள்ள கிங்ஸ்டன் நகரில் துவங்குவதற் கு 2 நாட்களுக்கு முன்பாக இந்த அறி விப்பு வெளியாகியுள்ளது. 

லண்டனில் கடந்த ஜூன் மாதம் ஐ.சி. சி.யின் வருடாந்திர போர்டு மீட்டிங் நடந்தது. இந்தக் கூட்டத்தின் போ து, டி  - 20 தரவரிசை காலத்தை 3 ஆண்டி லிருந்து 4 வருடமாக மாற்ற ஒப்புதல் பெறப்பட்டது. 

மேலும், இதற்கு முன்னதாக ஐ.சி.சி. யின் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி - 20 போட்டிகளுக்கான வருடாந்திர தரவரி சை கணக்கீடு ஆகஸ்ட் 1-ம் தேதியாக இருந்தது. அதனை மே 1-ம் தேதியாக மாற்றவும் போர்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இந்த புதிய கணக்கீட்டு முறையால் அணிகளில் பெரிய வித்தியாசம் எது வும் இல்லை. ஒன்று அல்லது 2 தரப் புள்ளிகளே கூட குறைய இருக்கிறது. 

மே.இ.தீவு அணிக்கு எதிரான டி  -20  தொடரை 2- 0 என்ற கணக்கில் பாகிஸ் தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி 2- வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. 

பாகிஸ்தான் அணி தற்போது 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பெற்று ள்ள தரப்புள்ளிகள் 118 ஆகும். அந்த அணி மேலும் 2 புள்ளி எடுத்தால் 2-வது இடத்திற்கு முன்னேறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்