முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது டெஸ்டில் டிராவுக்காக ஆடியது சரியே: தோனி

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

டொமினிக்கா, ஜூலை. 12 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டொமனிக்காவில் நடைபெற்ற 3 -வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிக்காக போராடவில்லை. டிராவுக்காக ஆடியது சரியே என்று கேப்டன் தோ னி தெரிவித்தார். ரொசேயு நகரில் நடைபெற்ற மே.இ.தீவுக்கு எதிரான 3 -வது டெஸ் டை இந்தியா டிரா செய்தது. வெற்றிக்கான 180 ரன் இலக்கை எடுக்க போராடாமல் வீரர்கள் டிரா செய்யும் வகையில் விளையாடினர். 

டிரா செய்யும் வகையில் விளையாடியது சரியான முடிவு தான் என்று கேப்டன் தோனி நியாயப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் போட்டி முடிந்ததும் நிருபர்களைச் சந்தித்த போது கூறியதாவது - 

ரன் இலக்கை நோக்கி முன்னேறி செல்லாதது ஏமாற்றம் அளிக்கவில் லை. வெற்றிக்கான இலக்கிற்காக ஆடுவது சிக்கலாகி விடும். ஏற்கனவே நாங்கள் ஒரு டெஸ்டில் வென்று விட்டோம். 

எனவே டிரா செய்யும் வகையில் ஆடிய முடிவு சரியானதே. வெற்றிக் காக ஆடும் போது, விக்கெட்டுகள் சரிந்து விடும். இறுதியில் தொட ரைக் கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடைசி டெஸ்டில் வெற்றி பெறாதது ஏமாற்றம் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறி னார். 

இந்திய அணி வெற்றிக்காக ஆடாதது ஆச்சரியம் அளக்கிறது என்று மே.இ.தீவு அணியின் கேப்டனான டேரன் சம்மி கூறியுள்ளார். இந்திய அணி கூடுதலான 15 ஓவரை எடுத்துக் கொள்ளாமல் முன்பாகவே ஆட்டத்தை முடித்துக் கொண்டது. 

மே.இ.தீவில் இந்தியா 3 -வது முறையாக தொடரைக் கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பாக 1971 -ம்  ஆண்டு வடேகர் தலைமையிலான அணி 1 - 0 என்ற கணக்கிலும், 2005 -ம் ஆண்டு டிராவிட் தலைமையி லான அணி 1 - 0 என்ற கணக்கிலும் டெஸ்டை கைப்பற்றி இருந்தன. 

இந்திய அணி தற்போது தோனி தலைமையில் 1 - 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி உள்ளது. 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்ற வாய்ப்பு இருந்தது. கடைசி டெஸ்டில் வெற்றி பெற முடியாமல் டிரா செய்ததால் அந்த வாய்ப்பு பறிபோனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்