முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

நியுயார்க்,செப்.- 5 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் மூன்றாவது சுற்றில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறினார். உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ஷரபோவா, 3-6, 6-3, 4-6 என்ற செட் கணக்கில் தர வரிசையில் 25 வது இடத்தில் உள்ள இத்தாலியின் பிளேலியா பென்னட்டாவிடம் தோல்வி கண்டார். இந்த ஆட்டத்தில் ஷரபோவா 12 முறை டபுள் பால்ட் தவறு செய்ததும் அவரின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் பென்னட்டா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  இரண்டாம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் வேரா ஸ்வோனரேவா, ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், ஜெர்மனியின் சபைன் விசிக்கி, ரஷ்யாவின் மரியா கிரிலென்கோ ஆகியோரும் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆடவர் ஒற்றையர் 2 வது சுற்றில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, நெதர்லாந்தின் ராபின் ஹேஸியை மிகவும் போராடி வெற்றி கண்டார். இந்த ஆட்டத்தின் முதல் 2 செட்களையும் ராபின் ஹேஸி கைப்பற்றியதால் நெருக்கடிக்குள்ளானார் முர்ரே. இதன் பிறகு சரிவில் இருந்து மீண்ட முர்ரே அடுத்த 3 செட்களையும் வென்று 6-7, 2-6, 6-2,6-0,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மகளிர் இரட்டையர் 2 வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் எலினா வெஸ்லினா ஜோடி 6-1, 7-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் விட்டாலியா உக்ரைனின் வோல்கா ஜோடியை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்