முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் சாதி-மத - பண அடிப்படையில் ஈடுபட்டால் நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,செப்.11 - மதுரை மாவட்டத்தில் சாதி, மதம் மற்றும் பணத்தின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சகாயம் எச்சரித்துள்ளார். சட்டம், ஒழுங்கை பாதுகாப்பது தொடர்பான ஆய்வு கூட்டத்தில் மதுரை மாவட்ட கலெக்டர் பேசியதாவது, மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிக்கவும், பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாக அசம்பாவிதங்களை தடுக்க காவல் துறையும், வருவாய்த் துறையும் இணைந்து செயல்பட வேண்டும். உத்தப்புரம், வில்லூர் ஆகிய கிராமங்களில் ஏற்பட்டுள்ள சாதி பிரச்சினையால் பலமுறை அமைதி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டும் இதுவரையில் முடிவு எட்டப்படவில்லை. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இரு சமுதாயங்களை சேர்ந்த இளைஞர்களை அழைத்து பேசி தீர்வு காண காவல்துறை மற்றும் வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் கிராமங்களிலேயே தங்கியிருந்து பணியாற்ற வேண்டும். அவ்வாறு இல்லாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாதி, மதம், பணத்தின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் போடும் வழக்கம் இருக்கக் கூடாது. மீறி யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்