முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்ப்பாசன திட்டத்தில் ஊழல்: எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன்

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், செப்.- 16 - நீர்ப்பாசன திட்ட ஒப்பந்தம் ஒன்றை தனியார் துறை கம்பெனிக்கு அளித்ததில் முறைடுகளை செய்துள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு கர்நாடக  ஐகோர்ட்டு  முன் ஜாமீன் வழங்கியுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இது தொடர்பாக  லோக் அயுக்தா நீதி மன்றத்தில் எடியூரப்பா மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எடியூரப்பா தான் முதல்வராக இருந்த போது அப்பர் பந்த்ரா நீர்ப்பாசன திட்ட ஒப்பந்தத்தை   ஆர்.என்.எஸ் ஜோதி என்ற  இன்ப்ராஸ்ட்ரக்சர் கம்பெனிக்கு  வழங்கியுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் பல முறைகேடுகள் மற்றும் புகார்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இது  தொடர்பாக எடியூரப்பாவுக்கு எதிராக லோக் அயுக்தா நீதி மன்றத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்  கட்சியை  சேர்ந்த  ஒய். எஸ்.வி தத்தா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கில்  நேரில் ஆஜராகும்படி  லோக் அயுக்தா நீதி மன்றம்  எடியூரப்பாவுக்கு  சம்மன் அனுப்பியது.  இதை அடுத்து தனக்கு முன் ஜாமீன் வழங்கும்படி  கர்நாடக ஐகோர்ட்டில் எடியூரப்பா  மனு தாக்கல்  செய்தார்.  இந்த மனு மீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டு  நீதிபதி  பி.எஸ். பில்லப்பா ரூ. 1 லட்சம் சொந்த ஜாமீனில் எடியூரப்பாவுக்கு  முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.  மேலும் 10 நாட்களில் சம்பந்தப்பட்ட நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும்  எடியூரப்பாவுக்கு  நீதிபதி  உத்தரவிட்டுள்ளார். மேலும்  கோர்ட்டின் முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கின் சாட்சியங்களை கலைக்க முற்படக்கூடாது என்றும்  நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்