முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்ஸாமில் 20 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி, மார்ச் - 21 - அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் கட்டதேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 20 வேட்புமனுக்களை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் இரு  கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளது.  இந்த தேர்தலுக்காக மொத்தம் 529 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்து விட்டது. இந்த 529 வேட்பு மனுக்களில் 20 வேட்புமனுக்களை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது. இந்த தகவலை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.சி.சாகு தெரிவித்தார்.

தற்போது முதல் கட்ட தேர்தலில் 509 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் இம்மாதம் 21-ம் தேதி என்றும் அவர் தெரிவித்தார்.

முதல் கட்ட தேர்தலில் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி 62 தொகுதிகளுக்கும்  இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி 64 தொகுதிகளுக்கும்  தேர்தல் நடைபெற உள்ளது.

ஓட்டு எண்ணிக்கை மே மாதம் 13-ம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

பதட்டமான தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன என்றும் இந்த மாநிலத்தில் உல்பா தீவிரவாதிகளின் ஆதிக்கம் இருப்பதால் துணை ராணுவ படை குவிக்கப்பட்டுள்ளது என்றும்  வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்