முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸா விவகாரத்தில் அரசின் நிலை என்ன? எம்.பி.க்கள் கேள்வி

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.22 - பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவிக்கக் கோரி மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

காஸா தாக்குதல் குறித்து விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கடந்த வாரம் முழுவதும் மாநிலங்களவையில் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்டது போல், நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் காஸா தாக்குதல் மீதான விவாதம் தொடங்கியது.

விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், "காஸா மீது தாக்குதல் வலுத்து வருகிறது. இந்தியா மவுனம் காத்துவருவது, வெளியுறவு கொள்கையில் இந்தியா மாற்றம் செய்துள்ளதா என்ற ஐயத்தை எழுப்புகிறது. இந்தியாவுக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தில் பாதிக்கும் மேலானது மேற்கு ஆசிய நாடுகளில் இருந்தே கிடைக்கிறது. இந்நிலையில் காஸா மீதான தாக்குதலை கண்டித்து மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது அவசியம்" என்றார்.

காஸா மீதான தாக்குதலை கண்டித்து இஸ்ரேலிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என டி.ராஜா வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரியும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்