முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழிசை சவுந்தரராஜனுக்கு சரத்குமார் வாழ்த்து

திங்கட்கிழமை, 18 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.19 - தமிழிசை சவுந்தரராஜனுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழக பா.ஜனதா கட்சியின் தமிழ்மாநில தலைவராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பா.ஜனதா கட்சியில் தொடர்ந்து பல்வேறு பொறுப்புக்களை ஏற்று, சிறப்பாகப் பணியாற்றி, அனைவரோடும் இணைந்து பாசத்தோடும், பண்போடும், நேர்மையான இயக்கப் பற்றோடும் உழைத்திட்ட அவருக்கு இப்பதவி ஒரு தகுந்த பரிசாகும்.

இந்தப் பதவியில் அவர் மேலும் சிறப்பாகப் பணியாற்றி தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் சிறந்த நன்மைகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தர பாடுபட வேண்டும். டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எச். ராஜாவுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்