முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்யூர் அனல் மின்நிலைய விவகாரம்: ஐகோர்ட் மறுப்பு

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.31 - செய்யூர் அனல்மின் நிலையத் திட்டத்துக்கான நில ஆர்ஜித நடவடிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செய்யூரில் நான்காயிரம் மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல்மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

மின் நிலைய அமைப்பது, நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு தனி துறைமுகம் அமைக்க தேவையான நிலத்தை விட கூடுதல் நிலம் அரசுக்கு தேவைப்பட்டது. இதற்காக கூடுதல் நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்கிறது. அவ்வாறு நிலம் ஆர்ஜிதம் செய்யும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணை நடந்தது. மனு விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் நில ஆர்ஜிதத்தால் பாதிக்கப்பட்டவர் இல்லை. அதில் அவருக்கு சொந்தமான நிலங்கள் ஏதும் இல்லை. மேலும், நில ஆர்ஜிதத்துக்கான தொகைகளை பெரும்பாலான நில உரிமையாளர்கள் பெற்றுவிட்டனர். எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறுது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்