முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் விமான விபத்தில் 7 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

டெஹ்ரான், அக்.13 - ஈரானின் தென்கிழக்கு பகுதியில் போலீஸ் விமானம் ஒன்று கீழே விழுந்து வெடித்து சிதறியது. இவ்விபத்தில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட 7 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

ஈரானின் தென்கிழக்கு பிராந்திய தலைநகர் ஜாகிதானில் இருந்து போலீசுக்கு சொந்தமான புராபெல்லர் பக விமானம் கிளம்பியது. இந்த விமானத்தில் ஜெனரல் மக்முத் சாதிக் என்ற உயர் போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பயணம் செய்தனர். மேலும் 3 விமான சிப்பந்திகளும் அந்த விமானத்தில் இருந்தனர். விமானம் ஜாகிதானில் கிளம்பியது சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 7 பேரும் பரிதாபமாக பலியானார்கள்.

ஈரானில் பயன்படுத்தப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்களும் மிக பழமையான ரகத்தை சேர்ந்தவை. அவை அனைத்தும் பராமரிக்கப்படாமல் செயல்பட்டு வருகின்றன. என வேதான், இத்தகைய விமான விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன என்று ஈரான் விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வடமேற்கு ஈரானில் தரையிறங்கிய போயிங் விமானம் வெடித்து சிதறிய விபத்தில் 77 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்