எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மேகதாது அணையை எதிர்த்து தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக விரிவான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அப்பட்டமாக அவமதிக்கும் செயலாகும். இதுதொடர்பான தகவல்களை ஏற்கனவே, 27.11.18 ஆம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். மேலும், அதில் கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப்பெற மத்திய நீர் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
தீர்மானம் நிறைவேற்றம்
காவிரியின் குறுக்கே அணை கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும், அதற்கான விரிவான விரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்குவதும் தமிழகத்தில் மிகுந்த வேதனையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் மறுக்கப்படும். அதனால், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்தும், அதற்கான விரிவான விரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியதை கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் இன்று (நேற்று) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசு, மத்திய நீர் ஆணையம் வழங்கியுள்ள அனுமதியை திரும்பப் பெற உத்தரவிடவேண்டும் என்பதையும் தமிழக சட்டப்பேரவை வலியுறுத்தியுள்ளது.
உடனடி நடவடிக்கை...
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில், தமிழகத்தின் அனுமதி பெறாமல் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே எந்தவொரு இடத்திலும் அணை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை கர்நாடக அரசோ அல்லது அது சார்ந்த அமைப்புகள் மேற்கொள்ளக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட தீர்மானத்தின் வடிவத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன். இந்த தீர்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
28 Apr 2024லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் புதிய உச்சம்: மின் நுகர்வு 45 கோடி யூனிட்டை தொட்டது
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.
-
ஜடேஜாவுக்கு பிளெமிங் புகழாரம்
28 Apr 202410 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மணிப்பூரில் உள்ள 6 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
28 Apr 2024இம்பால், மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் ஜா தெரிவித்து உள்ளார்.
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.