முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச பெருந்திருவிழா 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

அழகர்கோவில், - முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவில், அழகர்மலை உச்சியில் அமையப்பெற்றுள்ளது. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா சிறப்புடையதாகும். இந்தவிழா வருகிற 12ம் தேதி சனிக்கிழமையன்று காலையில் 11.15 மணிமுதல் 11.45 மணிக்குள் மங்கல இசைமுழங்க கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து அன்று மாலையில் யாகசாலை பூஜைகளும் பூதவாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறும். 13ம் தேதி ஞாயிற்றுகிழமை காலையில் யாகசாலை பூஜைகளும், தொடர்ந்து உற்சவருக்கு மகாஅபிஷேகமும், சாமி புறப்பாடும் நடைபெறும். பின்னர் அன்று மாலையில் 6 மணிக்கு அன்னவாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி, புறப்பாடு நடைபெறும்.
14ம் தேதி திங்கட்கிழமை காலையில் வழக்கம்போல் பூஜைகளும், மாலையில் காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 15ம் தேதி செவ்வாய்கிழமை காலையில் வழக்கம்போல் பூஜைகளும், சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடும், மாலையில் ஆட்டுகிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி புறப்பாடு நடைபெறும். பின்னர் 16ம் தேதி புதன்கிழமையன்று மாலையில் பூச்சப்பரத்தில் சுவாமி புறப்பாடும் 17ம் தேதி வியாழக்கிழமை மாலையில் யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 18ம் தேதி வெள்ளிக்கிழமை பல்லாக்கு புறப்பாடும் நடைபெறும்.
19ம் தேதி சனிக்கிழமை மாலையில் குதிரை வாகனத்திலும், 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தங்கத்தேரில் சுவாமி புறப்பாடும், அன்று மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும், 21ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், பின்னர் யாகசாலை கலச அபிஷேகமும், மாலை 5 மணிக்கு கொடியிறக்கமும், தீபாராதனையும் நடைபெறும். இதில் பக்தர்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படும். முன்னதாக மூலவர், வள்ளிதெய்வானை சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறும். இந்த திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து