முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்;டரசன்கோட்டையில் பொங்கல் விழா வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்பு

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை,-   சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோடையில்   சுற்றுலாத்துறை மற்றும் பேரூராட்சித்துறைகளின் மூலம் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்  .ஜெ.ஜெயகாந்தன்,  தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் 911 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு நாட்டரசன்கோடை ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்தனர். இப்பொங்கல் விழாவில் இஸ்ரேல், பெல்ஜியம், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து 9 ஆண்கள், 13 பெண்கள் என வெளிநாட்டைச் சேர்ந்த 22 சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். மேலும் வெளிநாட்டு பயணிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்து நாட்டரசன்கோட்டையில் உள்ள செட்டுநாட்டு கலாச்சாரத்துடன் கூடிய வீடுகள், கோயில்கள் முதலியற்றை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
        பின்னர் இப்பொங்கல் விழா முன்னிட்டு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் காரைக்குடி ஸ்ரீ நாட்டியாஞ்சலி பராநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்குழுவினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கினார்.
        முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22 சுற்றுலாப் பயணிகளை வரவேற்று பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
        இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைமை எழுத்தர் ரவிச்சந்திரன், சுற்றுலாத்துறை அலுவலர் ஜெயக்குமார், காரைக்குடி ஸ்ரீ நாட்டியாஞ்சலி கலைக்குழு முனைவர் மேகலாதேவி, திரைப்பட இயக்குனர் பேரரசு மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து