முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.26 - தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தின் முதல் நாளன்றே 2012-13-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.  இதில் புதிய சலுகைகளும் அறிவிப்புகளும் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணி அளவில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் மின்சார உற்பத்தியை அதிகரிப்பது, விவசாயிகளுக்கு சலுகைகள்,கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் இறுதிவரை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று பட்ஜெட் நிறைவேற்றப்படும்.அதன்பிறகு மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று மானியக்கோரிக்கை நிறைவேற்றப்படும். 

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய சலுகைகளும் அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய சலுகைகளையும் திட்டங்களையும் இந்தத்தொடரில் அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழக பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதம் 2-வது வாரத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்தாண்டு கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாளன்றே 2012-13-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இரண்டாவது ஆண்டாக பட்ஜெட்டை பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. மின்சார உற்பத்தியை அதிகரிக்கவும் கல்வி, விவசாய முன்னேற்றம்,நெடுஞ்சாலைதுறை மேம்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. வரிச்சலுகைகளும் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் சட்டசபை சபாநாயகர் ஜெயகுமார் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் பதில் உரையை எவ்வளவு நாட்கள் வைத்துக்கொள்வது என்பது குறித்து அந்தக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும். சுமார் 4 நாட்களக் இந்த விவாதம் மற்றும் பதில் உரை இடம் பெறலாம் என்று தெரிகிறது. பதில் உரைக்கு பின்னர் துறைவாரியான மானிய கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பதிலுக்கு பின்னர் நிறைவேற்றப்படும். முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்னர் தமிழர்களை படுகொலை செய்த அதிபர் ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க இரண்டு தீர்மானங்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார். அந்த தீர்மானங்களின் எதிரொலியாக ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றிபெற்று உலக அரங்கில் இலங்கை அரசுக்கு முதன் முறையாக தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வகையிலும் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அந்தஸ்து கிடைத்திடவும் மேலும் பல்வேறு முக்கிய முடிவுகளை முதல்வர் ஜெயலலிதா எடுப்பார் என்று உறுதியாக தெரிகிறது. கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வருவாய் கணக்கில் வரவுகள் மட்டும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு மேல் இருந்தது. இந்த நிதியாண்டில் அந்த கணக்கு ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பு எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டங்களும் இடம் பெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்