முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். கடந்த பிப்ரவரி 16-ம் தேதி சென்னை திரும்பிய விஜயகாந்த் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் வந்ததால் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் அவரை வீட்டில் சந்தித்து பேசினார்கள். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார். இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விஜயகாந்த்துக்கு பேசுவதில் சிரமம் இருந்ததால் பிரேமலதா விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார். கடைசி கட்டத்தில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் விஜயகாந்த் வேனில் இருந்த படியே ஓரிரு நிமிடங்கள் மெதுவாக பேசி சென்றார். இந்த நிலையில் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார். பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தனர். இப்போது 4 தொகுதிகள் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் பிரசாரத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால் அமெரிக்கா செல்வதை தள்ளிப் போடலாமா அல்லது பிரசாரத்தை தவிர்க்கலாமா என்று பிரேமலதா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து