எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் 60.21 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மேற்கு வங்காளத்தில் அதிகபட்சமாக 73.05 வாக்குகள் பதிவாகி உள்ளன.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. முதல் கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி 91 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி 96 தொகுதிகளுக்கும், 3-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி 115 தொகுதிகளுக்கும், 4-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி 71 தொகுதிகளுக்கும் நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தலும், 12-ம் தேதி 59 தொகுதிகளுக்கு 6-வது கட்ட தேர்தலும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து 7-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 8 மாநிலங்களில் தீவிரமாக நடந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். 7-வது கட்ட தேர்தலில் பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), சத்தீஸ்கர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய 8 மாநிலங்களில் இருக்கும் 59 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
7-வது கட்ட வாக்குப்பதிவு நடந்த 59 தொகுதிகளில் வாரணாசி, பாட்னா சாகிப், சண்டிகர், இந்தூர், அமிர்தசரஸ், கோரக்பூர், காசியாப்பூர் ஆகிய தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளாகும். இந்த தொகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
7-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 சதவீதம் பேர் மீது அதாவது 170 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளன. 12 பேர் மீது கொலை வழக்கும், 34 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. 20 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. 7-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 29 சதவீதம் பேர் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த வாக்குப்பதிவில் 3 மணி நேர நிலவரப்படி பீகாரில் 46.66 சதவீதம், இமாச்சல் பிரதேசம் 49.43 சதவீதம், மத்திய பிரதேசம் 57.27 சதவீதம், பஞ்சாப் 48.18 சதவீதம், உத்தரபிரதேசம் 46.07 சதவீதம், மேற்கு வங்கம் 63.58 சதவீதம், ஜார்கண்ட் 64.81 சதவீதம் மற்றும் சண்டிகரில் 50.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் இறுதியாக 7-ம் கட்ட வாக்குப்பதிவில் 60.21 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. பீகாரில் 49.92 சதவீதமும், இமாச்சல பிரதேசத்தில் 66.18 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 69.38 சதவீதமும், பஞ்சாப்பில் 58.81 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 54.37 சதவீதமும், மேற்கு வங்காளத்தில் 73.05 சதவீதமும், ஜார்க்கண்டில் 70.5 சதவீதமும், சண்டிகாரில் 63.57 சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 73.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினம் மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார் என தெரிந்து விடும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
கத்திரி வெயில் தொடங்கியது: 25 நாட்கள் வாட்டி வதைக்கும்
04 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க அன்புமணி கோரிக்கை
04 May 2024சென்னை : காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்
-
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
04 May 2024சென்னை : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் போட்டியிடாதது ஏன்? - பா.ஜ.க.வுக்கு உமர் அப்துல்லா கேள்வி
04 May 2024ஸ்ரீநகர் : மக்களவை தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்று பா.ஜ.க.வுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர்
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
வறுமையின் வலி எனக்கு தெரியும்: மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள்: பிரதமர் மோடி பேச்சு
04 May 2024ராஞ்சி : வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும் என்றும், மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள் என்றும் ஜார்கண்டில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி