முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 நாள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஏப்.- 9 - 4 நாள் விடுமுறைக்குப்பின் தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சில தினங்களுக்கு முன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது கோதுமை, ஓட்ஸ், இன்சுலின் மருந்து ஆகியவற்றிருக்கு அவர் வரிவிலக்கு அளித்தார். மேலும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டன. இந்தநிலையில் கடந்த5-ம் தேதி மகாவீர் ஜெயந்தியும் 6-ம் தேதி புனித வெள்ளியும் வந்ததால் சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. மேலும் சனி,ஞாயிறு ஆகிய தினங்களிலும் சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. இவ்வாறாக 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த 4 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று மீண்டும் ஆரம்பமாகிறது. இன்று முதல் மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும் என தெரிகிறது. இந்த கூட்டத்தொடர் மே மாதம் வரை நீடிக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்