எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அமெரிக்காவின் சான் ஹூசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 19 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீடு தமிழ்நாட்டிற்கு குவிந்தது. இதன் மூலம் 6,500-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
அமெரிக்க நாட்டிலுள்ள தொழில் முனைவோரிடம் இருந்தும், அமெரிக்க வாழ் தமிழ் முதலீட்டாளர்களிடம் இருந்தும், முதலீடுகளைப் பெற்று தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து எடுத்துச் செல்ல, அமெரிக்க நாட்டில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நியூயார்க் நகரில் 3-ம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் மட்டும் 16 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதன் மூலம், தமிழ்நாட்டில் 2,780 கோடி ரூபாய் முதலீடும், 20,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்க நாட்டின், சான் ஹீசே நகரில் கடந்த 4-ம் தேதியும் ஒரு முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார். இக்கூட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் முதலீடு செய்து, வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் அமெரிக்க நிறுவனங்களான பாக்ஸ்கான், லின்கோலின் எலக்ட்ரிக் மற்றும் ஜோஹோ கார்ப்பரேஷனை சேர்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள வசதிகள் பற்றியும், தங்களின் சிறப்பான அனுபவங்களைப் பற்றியும் எடுத்துரைத்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள சிறந்த உட்கட்டமைப்பு, திறன் மிக்க மனிதவளம், தடையில்லா மின்சாரம், தொழில் நடத்த உகந்த அமைதியான சூழல், விரைவான அரசு அனுமதிகள் ஆகியவற்றை விளக்கும் காட்சித் தொகுப்பும் திரையிடப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உரையில், முதலீட்டிற்கு ஏற்ற சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்பதனை வலியுறுத்தும் விதமாக, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும், முதலீட்டிற்கு அளித்து வரும் ஊக்க உதவிகளையும் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும், நிதி சார்ந்த தொழில் நுட்ப முதலீடுகளுக்கும் (பைன் டெக்) வானூர்தி (ஏரோபேஸ்) விண்வெளி (பேஸ்) தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் உகந்த மாநிலம் தமிழ்நாடு என்பதனை வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து, லின்கோலின், எலக்ட்ரிக், வேரபிள் மிம்ஸ், கால்டன் பயோடெக், இசட் எல் டெக்னாலஜிஸ், காபிசாப்ட், குலோடுலேர்ன், சியரா ஹெல்த் அலடர்ஸ், ஆக்ட் குலோபல் டெக் சொலியூன்ஸ், ரைப் ஐ.ஒ, லேடண்ட் ஏ.ஒ, நேச்சர்ஸ் மில்ஸ், சாய், ஏ.சி.எஸ் குலோபல் டெக் சொலியூஷன்ஸ், டாட் சால்வுடு சிஸ்டம்ஸ், இன்க் ஆகிய தொழில் நிறுவனங்களும், டி.ஐ. குளோபல், யூ.எஸ்.ஐ. எஸ்.பி.எப், குலோபல் எக்ஸ், டி.சி.எப் வென்ஜசர்ஸ் ஆகிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டனர்.
மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோருக்கு தேவையான உதவிகள் அளிக்க டிஜிட்டல் அக்சிலேட்டர்ஸ் என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். அமெரிக்க தொழில் முனைவோர் என்ற அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இந்த டிஜிட்டல் அக்சிலேட்டர்ஸ் திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறவுள்ள தமிழ்நாட்டு தொழில் முனைவோருக்கு அவர்கள் தொடங்கும் புதுத்தொழிலுக்கு தேவையான நிதியில் 10 சதவீதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும் எனவும், அதற்கென 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தினை தொடர்ந்து யாதும் ஊரே திட்டக் கூட்டத்தினை சான் ஹீசே நகரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தினார். இக்கூட்டத்தில் கலிபோர்னியா மாகாணம் மற்றும் மேற்கு அமெரிக்க பகுதிகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன. தமிழர்களை ஒருங்கிணைக்கும் இந்த அரிய முயற்சியான யாதும் ஊரே திட்டத்தை தமிழ் அமைப்புகள் வெகுவாக பாராட்டின. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கூட்டத்தில் மொத்தம் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீடு தமிழ்நாட்டிற்கு பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,500-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இது ஒரு அருமையான துவக்கம் மட்டுமே என்றும், வருங்காலங்களில் இம்முயற்சிகள் மேலும், விரிவாக்கப்பட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொலை நோக்குப் பார்வையில் குறிப்பிட்டுள்ள இலக்குகள் அனைத்தும் எட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.