முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் கமிஷனின் கெடுபிடிக்கு திமுகவின் அத்துமீறல்களே காரணம்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.29 - தேர்தல் கமிஷனின் இந்த கெடுபிடிக்கு திமுகவின் அத்துமீறல்களே காரணம் என்று பாரதீயஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.  பாரதீய ஜனதாகட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நேற்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக சட்டமன்ற தேர்தலில் தேர்தல் கமிஷனின் கடுமையான கெடுபிடி மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த கெடுபிடியினை இன்னும் அதிகமாக்க வேண்டும். இதற்காக பொதுமக்களும், வணிகர்களும் தேர்தல் ஆணையத்தின் மீது கோபப்படுவது அர்த்தமல்ல. இந்த கெடுபிடிக்கு காரணமே திமுகதான். திருமங்கலம் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாத சூழ்நிலை அறிந்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து திமுக வெற்றி பெற்றது.

     இதை திருமங்கலம் பார்முலா என்று மார்தட்டி கூறினர். இப்போது இது தேர்தல் பார்முலா ஆகிவிட்டது. இதை தடுப்பதற்காகவே தேர்தல் ஆணையம் கெடுபிடியில் இறங்கி உள்ளது. இதனால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என்று கருணாநிதி அஞ்சி தேர்தல் ஆணையத்தின் மீது கோபப்படுகிறார். இலவசங்களை வேண்டாம் என்று கூறவில்லை. அதற்காக மிக்சி,கிரைண்டர் வழங்குவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. குடும்ப அரசியலில் திமுக சிக்கி உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ரூ.1லட்சத்து 75 ஆயிரம் கோடி பெரிதாக பேசப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அதை விட பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. மணல் கொள்ளையினால் அரசுக்கு ரூ.53 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 10, 15 இடங்களையாவது பிஜேபி பிடிக்கும்.  விரைவில் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்