முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக வர்த்தக அமைப்பின் விதிகள் நியாயமற்றது: அமெரிக்கா குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) விதிகளை நியாயமற்றது என்றும் சீனா 30 ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு எதிராக இதனை பயன்படுத்தியதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-

உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) விதிகளை நியாயமற்றது. சீனா 30 ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு எதிராக இதனை பயன்படுத்தி உள்ளது. சீனா நம்பமுடியாத அளவிற்கு எங்களையும் பிற நாடுகளையும் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. உதாரணமாக, அவர்கள் வளரும் தேசமாக கருதப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் வளரும் நாடு என்பதால் சீனாவுக்கு பெரிய நன்மைகள் கிடைக்கின்றன. இந்தியா, வளரும் நாடு. அமெரிக்கா பெரிய வளர்ந்த நாடு. சரி, எங்களுக்கு ஏராளமான வளர்ச்சி உள்ளது. வளரும் தேசமாக இருப்பதால் அவர்களுக்கு பல நன்மைகள் வழங்கப்பட்டன. உலக வர்த்தக அமைப்பால் அமெரிக்காவும் சாதகமாக பயன்படுத்தப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்காவின் உதவியுடன் உலக வர்த்தக அமைப்பில் இணைந்த பின்னர் சீனப் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியது. உலக வர்த்தக அமைப்பில் சே சீனா அனுமதிக்கப்பட்டபோது, அது அமெரிக்காவிற்கு மிகவும் மோசமான நாளாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து