முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை : சுகாதார அமைச்சர் திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளத்தில் இதுவரை கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனாவால் கடந்த மே 7-ம் தேதி  மாநிலத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு விமானம், ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, பல மாநிலங்களில் இருந்து கேரளத்திற்கு தொழிலாளர்கள் வருகின்றனர். அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருக்கிறது.

எனினும் கேரளத்தில் கொரோனாவின் முதல் கட்டத்தில் 30 சதவீதமாக இருந்த பாதிப்பு இரண்டாவது கட்டத்தில் பாதிப்பு 15 சதவீதமாக குறைந்து விட்டது. இதில் தொடர்புகள் மூலமாக ஏற்படும் பாதிப்புகள் குறைந்துள்ளன. கொரோனா தொற்று காரணமாக பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ஒருவர் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். மே 11 அன்று அவர் வளைகுடா நாட்டில் இருந்து வந்தவர்.

ஏற்கெனவே கடுமையான நீரிழிவு மற்றும் உடல் பருமனால் அவதிப்பட்டார். வென்டிலேட்டர் மூலமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை மாநிலத்தில் சமூகப் பரவலாக மாறவில்லை  எங்களது மருத்துவக்குழு மற்றும் அரசு அதிகாரிகள் கொரோனா பரவல் தொடர்புகளை கண்டறிவதில் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். பாதிப்பு ஏற்பட்டோரின் அனைத்து தொடர்புகளையும் கண்டறிந்து நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து