எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போதைய நடைமுறையின்படி, இறப்பு நிகழ்வு நடந்து 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு / இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்திற்கு பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் ரூ.100 ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் காலதாமதக் கட்டணம் ரூ.200 ஆகவும், ஓராண்டிற்கு மேல் காலதாமதக் கட்டணம் ரூ.500 ஆகவும் உள்ளது.
இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த காலதாமத கட்டணம், பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்து வருவதாகவும், இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோயினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்கவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதை அறிவோம். நமது மருத்துவர்களின் சீரிய முயற்சிகளையும் மீறி தவிர்க்க முடியாத நேர்வுகளில் இறப்புகள் நிகழ்ந்து விடுகின்றன.
துயரமான இந்த சம்பவத்தில், சில காரணங்களினால் இறப்பு குறித்து வரையறுக்கப்பட்ட காலக்கட்டத்தில் அதாவது இறப்பு நிகழ்வுற்ற 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவித்தல் பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம், 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000-ன்படி, கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்திற்கு பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் ரூ.100/- ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் காலதாமதக் கட்டணம் ரூ.200/- ஆகவும், ஓராண்டிற்கு மேல் காலதாமதக் கட்டணம் ரூ.500/- ஆகவும் உள்ளது.
பெருந்தொற்றினால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், இந்தக் கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்தி வருவது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில், இக்கட்டணத்திலிருந்து பொது மக்களுக்கு விலக்களிக்கவும், அந்தக் காலதாமதக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், இந்த கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் / கிராமங்களில், 1-1-2020 முதல் நிகழ்ந்த பிறப்பு / இறப்பு குறித்த காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு பிறப்பு இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட காலதாமத கட்டணத்தை வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. காலதாமத கட்டண விலக்கினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பீட்டினை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசே ஈடுசெய்யும். இருப்பினும், உரிய காலத்தில் பிறப்பு / இறப்பினைப் பதிவு செய்ய அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.