முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய உருமாற்ற கொரோனா கண்டுபிடிப்பு : லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவுகிறது

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பின் வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

கொரோனா பாதிப்பு பெரும்பாலான நாடுகளில் குறைய தொடங்கியபோது அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் வெவ்வேறு வகையில் உருமாற்ற கொரோனா வைரஸ்பரவியது தெரிய வந்தது.

இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு கிரேக்க எழுத்துக்களான ஆல்பா, பீட்டா, காமா என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பெயரிட்டது.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா ‘ஆல்பா’ என்றும் இந்தியாவில் உருமாறிய கொரோனா ‘டெல்டா’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உருமாற்ற வைரஸ் லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவி உள்ளது என்றும், இதற்கு லாம்ப்டா என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு கூறும்போது, லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பெரு நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வகையான வைரஸ் 29 லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அர்ஜென்டினா, சிலி போன்ற நாடுகளில் வைரஸ் பரவி இருக்கிறது.

இந்த உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரசின் தாக்கம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து