எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு 30-6-2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஊரடங்கு இன்று 21-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், 19-6-2021 அன்று மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த ஊரடங்கை 28-6-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.
3 வகையாக பிரிப்பு
மேலும் மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வகை 1 - (11 மாவட்டங்கள்)
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்
வகை 2 - (23 மாவட்டங்கள்)
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.
வகை 3 - (4 மாவட்டங்கள்)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்
மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுள், வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
23 மாவட்டங்களில் தளர்வுகள்
மேலும், வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (hotels, restaurants and
bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-commerce) அனைத்தும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 வரை இயங்கலாம். இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும், அனைத்து தனியார் நிறுவனங்கள், 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களது கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.
செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும். பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.
காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும். திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும். வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) குறு நிதி நிறுவனங்கள் (MFIs) 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
மேலும், வகை 3-ல் உள்ள 4 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (hotels, restaurants and
bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-commerce) அனைத்தும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 வரை இயங்கலாம். இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். குழந்தைகள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படும்.
சிறார்களுக்கான கண்காணிப்பு / பராமரிப்பு, சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர். அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்கள், 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும், அனைத்து தனியார் நிறுவனங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். இதர தொழிற்சாலைகளும் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர். மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களது கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ கடைகள், சலவைக் கடைகள். தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். தேநீர்க் கடைகளில் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
இரவு 7 மணி வரை அனுமதி
மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்.
கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் (Computer Hardware, Software, Electronic Appliances Spare Parts) விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
அழகு நிலையங்கள், சலூன்கள், குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.
நிர்வாக பணிகளுக்கு அனுமதி
பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள் அனுமதிக்கப்படும். திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும். படப்பிடிப்பில் பங்கேற்றும் பணியாளர்கள் / கலைஞர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடில் கலந்து கொள்ள வேண்டும். படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும்.
திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும். மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
பொது போக்குவரத்துக்கு அனுமதி
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ இரயில் போக்குவரத்து, 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர். வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
பொது
இ- பாஸ் அவசியம்
திருமண நிகழ்வுகளுக்கு, வகை 2 மற்றும் 3-ல் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.