முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளையராஜா இசையில் "நினைவெல்லாம் நீயடா"

வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

லேகா தியேட்டர்ஸ் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இப் படத்தை, ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். கதாநாயகனாக பிரஜன் நடிக்க, கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க இருக்கிறார்.

மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் பிக்பாஸ் புகழ் கேப்ரில்லா நடிக்கிறார். மற்றும் மனோபாலா காளி வெங்கட், மயில்சாமி செல்முருகன் மதுமிதா ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.  நினைவெல்லாம் நீயடா பட பூஜை சமீபத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவில் நடைபெற்றது. 

இந்த படம் குறித்து டைரக்டர் ஆதிராஜன் கூறுகையில், "இந்திய திரையிசையின் அடையாளமாகத் திகழும் இளையராஜாவின் இசையில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. இந்த வாய்ப்பு என் தவத்திற்கு கிடைத்த வரம் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து