முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் முழு ஊரடங்கின் போது பஸ், ரெயில் நிலையங்களில் வாடகை கார், ஆட்டோ கிடைக்காமல் மக்கள் கடும் அவதி

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் நேற்று ஒருநாள் அமலான முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வாடகை ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் கிடைக்காமல் ஏராளமான பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் இன்று காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த ஊரடங்கின்போது பொது போக்குவரத்து, வாடகை ஆட்டோக்கள், வாடகை கார்கள் மற்றும் தனியார் வாகன போக்குவரத்திற்கு அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது. பால் விநியோகம், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் மட்டும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் மருத்துவத் தேவைக்கு செல்வோர் ஆம்புலன்ஸிலோ அல்லது சொந்த வாகனங்களிலோ செல்லலாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்வோர் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சொந்த வாகனங்களில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இருப்பினும் ஏற்கனவே முன்பதிவு செய்து ரெயில்கள் மூலம் ஏராளமான பயணிகள் நேற்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தனர். இவர்களில் பலர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். வாடகை ஆட்டோக்கள் மற்றும் கார்கள் கிடைக்காமல் பயணிகள் தங்களது வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் சவாரிக்கு வர மறுப்பதாக பயணிகள் தெரிவித்தனர். பயணச் சீட்டுகளை காண்பித்து ஆட்டோக்களை இயக்கினாலும், சவாரிகளை இறக்கி விட்டு திரும்பும் போது காவல்துறையினர் ஆவணங்கள் கேட்பதாகவும், அபராதம் விதிப்பதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இதனாலேயே ஆட்டோக்களை இயக்குவதில் சிரமம் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து