Idhayam Matrimony

பிரதீபாவின் குடும்பத்தினருக்கு நீடித்துவரும் பாதுகாப்பு

புதன்கிழமை, 2 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜன. - 3 - பிரதீபா பாட்டீல் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவரது குடும்பத்தாருக்கு 19 போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரதீபா பாட்டீல் கடந்த 2007 ம் ஆண்டு ஜூன் மாதம் ஜனாதிபதியான போது அவரது கணவர் தேவிசிங் செகாவத், மகன் ராஜேந்தர், மகள் ஜோதி, மருமகள் மஞ்சிரி, மருமகன் ஜெயேஷ், பேரன்கள் பிரித்வி, த்ருவேஷ், பேத்திகள் செளரபி மற்றும் வேதிகா ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு மத்திய அரசு மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து பிரதீபா பாட்டீலின் கணவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு, மகன் மற்றும் மகளுக்கு ஒய் பிரிவு, மீதமுள்ள 6 பேருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதன்படி ஒரு எஸ்.ஐ. மற்றும் 18 கான்ஸ்டபிள்கள் பிரதீபா பாட்டீலின் குடும்பப் பாதுகாப்பு பணியில் ்ஈடுபடுத்தப்பட்டனர். பிரதீபா ஜனாதிபதி பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வாபஸ் பெறவில்லை. பிரதீபா பாட்டீலின் குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பை வாபஸ் பெற அனுமதி அளிக்குமாறு மகாராஷ்டிர அரசு உள்துறை அமைச்சகத்தை மூன்று முறை அணுகியும் பதில் கிடைக்கவில்லை. மாநிலத்தில் உள்ள போலீசாரில் பலர் அரசியல் தலைவர்களை பாதுகாக்கும் பணியில் ஈ்டுபட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கை காக்க போலீசார் போதுமான அளவில் இல்லை என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago