எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை துறைமுகத்தில், இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வின் முதற்கட்டமாக 9000 மெட்ரின் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால்பவுடர் மற்றும் 24 மெட்ரிக் டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு சரக்கு கப்பலில் கொடியசைத்து அனுப்பி வைத்தார். நேற்று அனுப்பப்பட்ட முதற்கட்ட உதவிப்பொருட்களின் மதிப்பு 45 கோடி ரூபாய் ஆகும்.
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, அப்பொருட்களை வழங்க உரிய அனுமதி வழங்குமாறு 31.03.2022 அன்று டெல்லி சென்று பிரதமரை சந்தித்து முதல்வர் வலியுறுத்தினார். மேலும், ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுதெடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டதுடன் 15.04.2022 அன்று கடிதமும் எழுதி நினைவூட்டினார்.
இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவி புரிந்திட 40 ஆயிரம் டன் அரிசி, உயிர் காக்கக்கூடிய மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகிய அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசினை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி இலங்கை மக்களுக்கு உதவக்கூடிய வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கும் பணியினை சீரிய முறையில் செய்திட அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழக அரசு மருந்துப்பொருட்கள் நிறுவனம் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 13ம் தேதியன்று இதற்கான ஒன்றிய அரசின் இசைவு பெறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இலங்கை வாழ் மக்களுக்கு முதற்கட்டமாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி, ஆவின் பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை TAN BINH 99 என்ற சரக்குக் கப்பலில் அனுப்பி வைக்கும் நிகழ்வினை முதல்வர் நேற்று சென்னை துறைமுகத்தில், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு நிகழ்வாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் மாதிரித் தொகுப்பினை இலங்கை துணைத் தூதர் முனைவர் வெங்கடேசுவரனிடம் முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாசர், செஞ்சி.கே.எஸ்.மஸ்தான், பொதுத்துறை செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ்.பிரபாகர், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக தலைவர் தீபக் ஜேக்கப், சென்னை துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
05 May 2024புதுடில்லி : தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., ஒரு போதும் அரசியலம