முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பி நாராயணனாக உருமாறிய மாதவன்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2022      சினிமா
Madhavan 2022-06-27

Source: provided

விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் என்ற திரைப்படத்தை மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில் இது குறித்துப் பேசிய மாதவன், நம்பி நாராயணனை  அனைவரும் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. எனவே, மக்களிடம் நம்பி நாராயணனை கொண்டு செல்லவே இந்த திரைப்படத்தை எடுத்ததாக தெரிவித்தார். 

மேலும் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என்று இருப்பது மிகப்பெரிய பொறுப்பு அது கடினமாக இருந்ததாகவும் அவர் கூறினார். மேலும் இந்த திரைப்படத்தை வியாபாரத்தை முக்கியத்துவப்படுத்தி எடுக்கவில்லை. முழுக்க முழுக்க நம்பி நாராயணனை பற்றி கூற வேண்டும் என்ற எண்ணத்திலேயே ராக்கெட்ரி திரைப்படத்தை எடுத்து இருக்கிறேன் என மாதவன் தெரிவித்தார். இந்த திரைப்படத்தில் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் சம்பளம் பெறவில்லை எனவும் மாதவன் கூறினார். மேலும் ராக்கெட்ரி திரைப்படம் உருவான விதம் குறித்து, படம் வெளியான பிறகு வீடியோ வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் மாதவன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து