முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்திநகர் - மும்பை சென்டிரல் இடையேயான நாட்டின் 3-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணம் பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2022      இந்தியா
Modi 2022-09-29

Source: provided

புதுடெல்லி: பிரதமர் மோடி காந்திநகர் மற்றும் மும்பை சென்டிரல் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இன்று கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.

அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய தலைமுறைக்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என மத்திய ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரியில் பட்ஜெட்டின்போது, வெளியிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காந்திநகர் மற்றும் மும்பை சென்டிரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் ரெயிலில் காந்திநகரில் இருந்து காலுபூர் வரை பிரதமர் மோடி பயணம் செய்கிறார். இந்த ரெயில்களின் கூடுதல் சிறப்பம்சம், இதுவரை பயன்படுத்தப்பட்ட ஸ்டீலுக்கு பதிலாக எடை குறைந்த அலுமினியம் பயன்படுத்தப்படும். இதனால், 50 டன்கள் எடை குறைவதுடன், குறைவான அளவிலேயே ஆற்றலை உபயோகப்படுத்தும்.

பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் ரெயில் நாட்டின் 3-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகும். இதற்கு முன்பு, புதுடெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் ரெயில் 2019-ம் ஆண்டு பிப்ரவரியிலும், மற்றொரு ரெயில் புதுடெல்லியில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா இடையே 2019-ம் ஆண்டு அக்டோபரிலும் தொடக்கி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து