முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் மையமாகும் குவாம் தீவு: அமெரிக்க ஏவுகணைகள் தயார்

வியாழக்கிழமை, 4 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

பான்யாங், ஏப். 5 - கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவு மீது வடகொரியா முதலில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் அமெரிக்கா தமது ஏவுகணைகளை முன்நகர்த்தியுள்ளது. தென்கொரியா, அமெரிக்கா மீது போர் தொடுப்போம் என்பது வடகொரியாவின் பிரகடனம். இந்நிலையில் அமெரிக்கா, தென்கொரியா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவதற்கான கடைசி உத்தரவை ராணுவத்துக்கு பிறப்பித்து விட்டோம் என்றும் அந்நாடு அறிவித்துள்ளது. இதனால் வடகொரியா ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் குவாம் என்ற தீவு அமெரிக்காவுக்கு சொந்தமாக உள்ளது. இத்தீவின் மீதுதான் வடகொரியா முதல் தாக்குதலை நடத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இத்தீவில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. 

வடகொரியா ஏவுகணை மூலம் அணுகுண்டு வீசினால் அதை நடுவானிலேயே வழிமறித்து அழிக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா தயாராக வைத்துள்ளது. டிரக் லாஞ்சர்களில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு முன் நகர்த்தப்பட்டுள்ளன. அதேபோல எதிரிநாட்டு ஏவுகணையை முன்கூட்டியே கண்டறிந்து தகவல் தெரிவிக்கும் ரேடார்களும் முன் நகர்த்தப்பட்டுள்ளன.இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் உச்சகட்ட போர் பதட்டம் நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்