முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து 4-வது நாளாக சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க கம்பத்தில் வனத்துறையினர் முகாம்

திங்கட்கிழமை, 29 மே 2023      தமிழகம்
Arikomban 2023-05-29

Source: provided

கம்பம் : கம்பம் அருகே 4-வது நாளாக சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகளுடன் வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த அரிக்கொம்பன் யானை லோயர்கேம்ப், கம்பம் நடராஜன் மண்டபம், துணை மின்நிலையம் மற்றும் நாட்டுக்கல், நந்தகோபாலன் கோயில் தெருக்களில் சுற்றித்திரிந்து பின்னர் துணை மின்நிலையம் வழியாக சனிக்கிழமை இரவு சாமாண்டிபுரம் சென்றது.

அங்கிருந்து சுருளிப்பட்டி ஊராட்சிக்குள் சென்ற யானை கஜம் சாலை வழியாக ஹைவேவிஸ் மலை அடிவாரத்திற்கு சென்றது. அன்று இரவு வனப்பகுதி வழியாக அருகே உள்ள கூத்தனாட்சி மலைப்பகுதியில் நின்றதை நேற்று (திங்கள்கிழமை) காலையில் வனத்துறையினர் பார்த்துள்ளனர்.

காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன் பட்டி, சுருளிப்பட்டி, அணைப்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து கூத்தனாட்சி மலைப்பகுதிக்கு செல்லும் சாலைகளை யாரும் செல்லாதவாறு காவல்துறையினர் அடைத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவக்குழுவினர் மற்றும் வனத்துறையினர் அரிக்கொம்பன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து