முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் என குற்றச்சாட்டு: பாராளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு : ராகுல் தலைமையில் இன்டியா கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 24 ஜூலை 2024      இந்தியா
MP 2024 07 24

Source: provided

புதுடெல்லி : பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் என குற்றச்சாட்டிய இன்டியா கூட்டணி கட்சியினர் பாராளுமன்ற வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே பிரச்சினையை எழுப்பி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட் தாக்கல்...

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர், ஆகஸ்டு 12-ம் தேதி வரை நடைபெறும். இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில், நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் அவையில் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டன. இந்த விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்து பேசினார். இந்த சூழலில், பாராளுமன்ற இரு அவைகளிலும் மத்திய பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியமைத்த பின்னர் முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இதுவாகும்.

எதிர்க்கட்சிகள்....

இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். இதில், சில பொருட்களுக்கு வரி குறைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும், ஆந்திர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதியொதுக்கீடு அறிவிக்கப்பட்டது.  இந்த இரு மாநிலங்களை ஆளும் அரசுகள், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு நேரடி ஆதரவை வழங்கியுள்ளன. இதனால், அந்த மாநிலங்களுக்கு சலுகை அளிக்கப்பட்டு உள்ளது என எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டாக கூறப்பட்டது.

ராகுல் தலைமையில்...

முன்னதாக அவை நடவடிக்கைகள் நேற்று தொடங்கு முன் பாராளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இன்டியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சபாநாயகர் எச்சரிக்கை...

இந்த சூழலில், பாராளுமன்ற மக்களவை நேற்று காலை கூடியதும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பட்ஜெட் நிதிஒதுக்கீடு விவகாரங்களை எழுப்ப முயன்றனர். எனினும், கேள்வி நேரத்தில் இடையூறு செய்ய கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்து பேசினார். பாராளுமன்ற பாரம்பரிய முறைகளை இருதரப்புகளை சேர்ந்த உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அவை நடவடிக்கைகளுக்கு திட்டமிட்ட முறையில் இடையூறு ஏற்படுத்துகிறீர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நுழைய முடியாத... 

பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து செல்லும் வழியில், எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பாராளுமன்ற இல்லத்திற்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டது என்று பிர்லா மற்றும் பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அவையில் எடுத்து கூறினார். இந்த விவகாரம் பற்றி எம்.பி.க்கள் பலர் தன்னிடம் கடிதம் வழியே தெரிவித்தனர் என பிர்லா கூறினார். எனினும் அவையில், பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதும் அவர்கள் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையில்...

இதற்கிடையே மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை பட்ஜெட்டை விவாதத்துக்கு முன்வைத்தபோது, சில மாநிலங்களுக்கு அதிக நிதியும், பல மாநிலங்களுக்கு நிதியே ஒதுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளதாக கார்கே பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

வெளிநடப்பு ... 

கார்கேவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை என்றும் அனைத்து மாநில பெயர்களையும் குறிப்பிட முடியாது என்றும் தெரிவித்தார். இதற்கிடையே மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து