முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      உலகம்
Sarath-Fonseka-2024-07-25

கொழும்பு, இலங்கை அதிபர் தேர்தலில்  போட்டியிட இருப்பதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்

இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். 

அனைத்துக் கட்சி ஆதரவுடன் அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவின்  பதவிக் காலம்  நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால்,  அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும்  செப்டம்பர் 17-ம் தேதியில் இருந்து அக்டோபர் 16-ம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே  இருப்பதால் அங்கு அரசியல் கட்சிகள் அதிபர் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார்.  இதனிடையே,  அதிபர் தேர்தலில்  போட்டியிட இருப்பதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் சரத் பொன்சேகா இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து