முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் மீதான சுங்க வரி குறைப்பு எதிரொலி: கடந்த 3 நாட்களில் பவுனுக்கு 3,400 வரை ரூபாய் குறைந்தது

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      தமிழகம்
gold 2023 01 26

Source: provided

சென்னை:  தங்கத்தின் விலை தொடர்ந்து நேற்று 3-வது நாளாக குறைந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை எதிர்கொண்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,400 வரை குறைந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து தங்கத்தின் விலை இந்தியாவில் சரிந்து வருகிறது. அதன்படி நேற்று (ஜூலை 25) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 ஆக குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.6,430-க்கு விற்பனையானது. இதனால் பவுனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.51,440-க்கு விற்பனையானது.

முன்னதாக, புதன்கிழமை கிராமுக்கு ரூ.60 மற்றும் செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 275 என தங்கம் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது. அண்மைய காலமாக தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வந்தது. அதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்கள் தங்கம் வாங்குவது இயலாத சூழல் இருந்தது. தற்போது தங்கம் விலை குறைந்துள்ளதால் பெண்கள் நகைகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து