முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை 4.25 லட்சம் பக்தர்கள் அமர்நாத் கோயிலில் தரிசனம்

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      இந்தியா
Amarnath

Source: provided

ஜம்மு: தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இதுவரை 4.25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.

வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், குகைக் கோயிலைத் தரிசிக்க 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கொண்ட புதிய குழு நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணையுடன் 106 வாகனங்களில் 3,089 பேர் அடங்கிய 28வது குழு அதிகாலை 3.23க்கு பகவதி நகர் அடிப்படை முகாமிலிருந்து புறப்பட்டது. இதில் 1,803 பக்தர்கள் பாரம்பரிய 48 கி.மீ பஹல்காம் வழியாகவும், 1,286 பேர் செங்குத்தான 14 கி.மி பால்டால் வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்

3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலில் இயற்கையாக உருவான பனி லிங்கத்திற்கு ஏற்கனவே 4.25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்தாண்டு 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசித்தனர். ஜூன் 28ஆம் தேதி முதல் ஜம்முவில் இருந்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​முதல் குழுவைக் கொடியசைத்துத் துவக்கி வைத்ததிலிருந்து, 3,11,493 பக்தர்கள் ஜம்மு அடிப்படை முகாமிலிருந்து புறப்பட்டுள்ளனர். காஷ்மீரில் உள்ள பால்டால் மற்றும் பஹல்காம் அடிப்படை முகாம்களிலிருந்து தொடங்கிய 52 நாள் யாத்திரை ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறைவடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து