முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதிப் போட்டியில் டி.எஸ்.கே.

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      விளையாட்டு
25-Ram-58

Source: provided

அமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடர் மேஜர் லீக் கிரிக்கெட் எனப்படும் எம்.எல்.சி கடந்த ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. சிஎஸ்கே அணி போல டிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் போல மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளும் உள்ளன. இந்தத் தொடரில் பிளே ஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க்கை ஃபாப் டு பிளெஸ்ஸி தலைமையிலான டிஎஸ்கே அணி வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் 20 ஓவர் முடிவில் 163/8 ரன்கள் எடுத்தது. டிஎஸ்கே அணி 18.3 ஓவரில் 167/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டு பிளெஸ்ஸி 72 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். டிஸ்கே அணியில் கான்வே 51*, ஆரோன் ஆர்டி 40 *ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டார்கள். இந்த வெற்றிக்குப் பிறகு பொல்லார்டை பிராவோ கிண்டல் செய்தார். மற்றுமொரு பிளே ஆஃப் சுற்றில் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃபீரிடம் அணியும் கம்மின்ஸ் தலைமையிலான சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணியும் மோதுகின்றன.

டு பிளெஸ்ஸி புதிய சாதனை

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு பல வருடங்களாக விளையாடியிருந்த டு பிளெஸ்ஸி தற்போது ஆர்சிபி அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். தற்போது எம்எல்சி எனப்படும் டி20 லீக் தொடரில் டிஎஸ்கே அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். பிளே ஆஃப் சுற்றில் மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றுள்ளார். தனது டி20 கிரிக்கெட்டில் இதுவரை 380 போட்டிகளில் விளையாடியுள்ள டு பிளெஸ்ஸி 10,500 ரன்களை எட்டியுள்ளார். இதில் 6 சதங்கள், 72 அரைசதங்கள் அடங்கும்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் டு பிளெஸ்ஸி 14ஆவது இடத்தினை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் 14,562 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி 12,886 ரன்களுடன் 4ஆவது இடத்திலும் ரோஹித் சர்மா 11,830 ரன்களுடன் 8ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களில் டு பிளெஸ்ஸி 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் 26 ரன்கள் முன்னிலையில் டேவிட் மில்லர் இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்: 1. கிறிஸ் கெயில் - 14,562, 2. சோயிப் மாலிக் - 13,360, 3. கைரன் பொல்லார்ட் - 12,963, 4. விராட் கோலி - 12,886, 5. அலெக்ஸ் ஹேல்ஸ் - 12,783.

ஏஞ்செலிக் கெர்பர் ஓய்வு

பிரபல டென்னிஸ் வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பர் (36) நடப்பு பாரிஸ் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார். கடந்த 2018 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி தனது 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தார் கெர்பர். அதன் பிறகு 2019-இல் இரு போட்டிகளில் பங்கேற்று இறுதி ஆட்டம் வரை வந்து தோற்றார். சமீபத்தில் டென்னிஸ் வரலாற்றில் தனது 14-ஆவது பட்டத்தை வென்றார்.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஏஞ்செலிக் கெர்பர் கூறியதாவது.,  ஒலிம்பிக்ஸ் தொடங்குவதற்கு முன்பே பாரீஸ் 2024ஐ மறக்க முடியாதெனக் கூறியிருந்தேன். ஏனெனில் இதுதான் எனது கடைசி டென்னிஸ் தொடர். இதுதான் சரியான முடிவாக இருக்குமென நினைக்கிறேன். எனது இதயம் முழுக்க இந்த விளையாட்டாக நேசிக்கிறேன். இந்த அற்புதமான நினைவுகளுக்கும் வாய்ப்புகளுக்கும் மிக்க நன்றி. இந்த ஒலிம்பிக்ஸ் தொடர்களில் பங்கேற்பது ஒரு டென்னிஸ் வீராங்கனையாக எனது வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளை அதாவது ஏறுவது (2012), உச்ச நிலை (2016), தற்போது இறுதிக் கோடு (2024) என எடுத்துரைப்பதுபோல் இருக்கிறது எனக் கூறியுள்ளார். வரும் 27 முதல் ஆக.4ஆம் தேதி வரை ஒலிம்பிக்ஸில் டென்னிஸ் தொடர் நடைபெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வீரர் விலகல்

இந்தியா - இலங்கை மோதும் டி20 ஆட்டங்கள் ஜூலை 27, 28, 30 ஆகிய தேதிகளில் பல்லெகெலெவில் நடைபெறவுள்ளன. டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி, திங்கள்கிழமை இரவு இலங்கை சென்றடைந்தது. அணி விவரம்: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் பெரெரா (வி.கீ.), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (வி.கீ.), தினேஷ் சண்டிமல், கமிண்டு மெண்டிஸ், தசுன் ஷானகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெலாலகே, மஹீஷ் தீக்ஷனா, சமிண்டு விக்ரமசிங்கே, மதீஷா பதிரானா, நுவன் துஷாரா, துஷ்மந்தா சமீரா, பினுரா ஃபெர்னாண்டோ.

இதிலிருந்து ஏற்கனவே சமீரா வெளியேறியுள்ள நிலையில் தற்போது நுவன் துஷாரா காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.  ஃபீல்டிங் பயிற்சியின்போது இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளதை இலங்கை அணியின் மேலாளர் மஹிந்த ஹலன்கோடாவும் உறுதி செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் நுவன் துஷாரா 7 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இவரும் மலிங்கா ஸ்டைலில் பந்து வீசுவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மதீஷா பதிரானா இப்படி பந்து வீசி பிரபலமானார். இவருக்கு பதிலாக தில்ஷன் மதுஷனகா அணியில் பங்கேற்பார் என இலங்கை கிரிக்கெட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து