முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விஜய்யின் கடைசி படம் குறித்த அறிவிப்பு வெளியானது

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024      தமிழகம்
vija7y

Source: provided

சென்னை: ஜனநாயக தீபத்தை ஏற்றுபவர் 2025 ம் ஆண்டு வருகிறார் என தளபதி 69 குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் 'தி கோட்' படத்தை தொடர்ந்து தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார்.

'தளபதி 69' படத்தை அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளார். மேலும் மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

நேற்று மாலை 5 மணிக்கு படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கே.வி.என் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி அறிவிப்பு வெளியானது. இப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தீப்பந்தத்தை ஏந்தியபடி இருக்கும் போஸ்டரை பகிர்ந்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து