முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் தீர்ப்பளிக்க முடியாது: பிரியாவிடை நிகழ்ச்சியில் டி.ஒய்.சந்திரசூட் உருக்கம்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      இந்தியா
Chandrachut-1

Source: provided

புதுதில்லி : யாரையாவது காயப்படுத்தியிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், இன்று முதல் நான் தீர்ப்பளிக்க முடியாது, ஆனால் நிறைவாகவே உணர்கிறேன் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வுபெறப்போகும் டி.ஒய். சந்திரசூட் கூறியிருக்கிறார்.

நவ. 10ஆம் தேதியுடன் அவரது பணிக்காலம் நிறைவு பெற்றாலும், அன்றைய தினம், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால், நடைமுறைப்படி, அவரது இறுதி பணி நாள் வெள்ளிக்கிழமையாகவே அமைந்துவிட்டது.  சுப்ரீம் கோர்ட்த்தில் நேற்று நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில், பங்கேற்று பேசிய டி.ஒய். சந்திரசூட், இந்த நீதிமன்றம்தான் என்னை தொடர்ந்து இயக்கிக்கொண்டிருந்தது. இதுவரை நாம் அறிந்திருந்தாத பல மனிதர்களை சந்திக்கிறோம், அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், முந்தைய வழக்கைப் போல புதிய வழக்கு ஒன்று வருவதில்லை. ஒவ்வொன்றும் புதிதாகவே இருக்கும்.

ஒருவேளை, யாரையேனும் நான் காயப்படுத்தியிருந்தால், அவர்கள் என்னை மன்னித்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இவ்வளவு பேர், பிரியாவிடை நிகழ்ச்சிக்கு வந்திருப்பதற்கும் மனமார்ந்த நன்றி என்று உரையாற்றினார்.

வழக்கமாக ஓய்வுபெறும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, அடுத்து வரும் புதிய தலைமை நீதிபதி முன்னிலையில் ஒரு சம்பிரதாய அமர்வை நடத்துவார்கள். அதனை வெள்ளிக்கிழமை எத்தனை மணிக்கு வைத்துக் கொள்ளலாம் என்று நீதிமன்ற ஊழியர்கள் கேட்டதற்கு, இன்று என்னால் எத்தனை வழக்குகளை முடியுமோ அத்தனை வழக்குகளை விசாரிக்கிறேன், எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிட விரும்பவில்லை என்றே கூறியதாக டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்த்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் நியமிக்கப்பட்டார். முன்னதாக, 2016 ஆம் ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட டி.ஒய். சந்திரசூட், தனது இறுதி உரையின்போது நீதிமன்றத்தில் ஏராளமானோர் இருந்ததால் ‘உணர்ச்சிவயப்பட்ட நிலையில்’ உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து